சிட்னி பெரும் பிராந்தியத்துக்கு விடுக்கப்பட்ட பேரவல எச்சரிக்கை!

297shares

அவுஸ்திரேலியாவில் எரியும் காட்டுத்தீயின் புகை மண்டலம் தற்போது நியூசிலாந்துவரை பரவியுள்ளது.

இந்த 120 இடங்களில் பரவியுள்ள காட்டுத்தீ காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணஙகளுக்கு 7 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடுமையான கோடைவெப்பமும் பலமாக வெப்பக்காற்றும் காட்டுத்தீயின் பரவலை தீவிரமாக்கியுள்ளது.

இதனால் சிட்னி பெரும் பிராந்தியத்துக்கும் பேரவல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்டுத் தீ காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகியுள்ளன.


You May Like This

இதையும் தவறாமல் படிங்க