முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

5155shares

விஜய் சேதுபதியால் மாஸ்டர் படத்திற்கு பிரச்சனை வருமோ என்று விஜய் ரசிகர்கள் பயந்த நிலையில் முத்தையா முரளிதரனால் நடந்த மாற்றத்தை பார்த்து மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 800 என்கிற பெயரில் படமாக எடுக்கவுள்ள நிலையில் அந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தமிழனாக இருந்தும் கூட இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு ஆதரவாக இருந்த துரோகி முத்தையா முரளிதரனாக நடிக்க வேண்டாம் என்று திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

தமிழினத் துரோகியின் முகமாக உங்கள் முகம் ஆகிவிட வேண்டாம் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார். விஜய் சேதுபதியை வசை பாடி ட்விட்டரில் அவ்வப்போது ஏதாவது ஒரு ஹேஷ்டேகை டிரெண்ட் செய்ய விட்டார்கள்.

இந்நிலையில் விஜய் சேதுபதியால் மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று விஜய் ரசிகர்கள் பயத்தில் இருந்தார்கள். சிலர் தங்கள் பயத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். இத்தனை பேர் சொல்லியும் கூட முத்தையா முரளிதரனாக நடிக்க மாட்டேன் என்று ஒரு வார்த்தை சொல்லாத விஜய் சேதுபதியின் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் ட்வீட் செய்தார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் குரல் கொடுத்தார்கள். மாஸ்டர் விஜய் படம் தான் என்றாலும் அதில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்கிற ஒரு காரணத்திற்காக எதிர்க்க வேண்டும் என்றார்கள்.

இப்படி ஏதாவது வில்லங்கமாக நடந்துவிடுமோ என்று தான் விஜய் ரசிகர்கள் பயந்தார்கள். இந்நிலையில் 800 படத்தில் இருந்து விலகிவிடுமாறு முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகிவிட்டார்.

விஜய் சேதுபதி எடுத்த முடிவை பார்த்த விஜய் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளார்கள். இனிமேல் கண்டிப்பாக மாஸ்டர் ரிலீஸுக்கு விஜய் சேதுபதியால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

இதற்கிடையே முத்தையா முரளிதரனை தலைமை பயிற்சியாளராக வைத்திருக்கும் சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளரிடம் போய் கேள்வி கேளுங்கள் என்று சிலர் கூறியுள்ளனர்.

அரசியல் பின்னணி உள்ள ஒரு தமிழருக்கு சொந்தமான ஐபிஎல் அணியில் முத்தையா முரளிதரன் வேலை செய்வது பிரச்சனை இல்லையாம். ஆனால் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க சம்மதித்தால் மட்டும் பிரச்சனையா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!