விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் - இலங்கை இளைஞனை கைது செய்ய நடவடிக்கை

395shares

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்த நபர் இலங்கைப் பிரஜை என அடையாளம் கண்டுள்ளதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே இலங்கையில் இருக்கும் குறித்த இளைஞரை கைது செய்ய இண்டர்போலின் உதவியை நாட தமிழக பொலிஸார் முடிவு செய்துள்ளனர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மாட்டேன் என்பதை நடிகர் விஜய் சேதுபதி நன்றி!வணக்கம் என்று மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் இலங்கை தமிழர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதை கண்டித்து, விஜய்சேதிபதியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக ஒருவர் தனது டுவிட்டரில் மிரட்டல் விடுத்தார்.

இதற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சம்பந்தப்பட்டவரின் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நடிகர் விஜய் சேதுபதி குடும்பம் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார், 153, 294(பி),Ipc 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விஸய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்தவர் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் என தமிழக பொலிஸார் கண்டு பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!