நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள

எங்கள் வலைத்தளங்களில்

விவரங்கள்

அமரர் திலகவதி உலகநாதன்
Frame

அமரர் திலகவதி உலகநாதன்

அன்னை மடியில் : 01 January, 1944

இறைவன் அடியில் : 21 January, 2014

விவரம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திலகவதி உலகநாதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் நான்கு அலை கடலோடு
அருந்ததி பார்த்து அன்னமிட்ட கையோ ஆண்டவனோடு
அன்பான அம்மா, பாசமிகு மாமி- பாலூட்டி
பாசம் காட்டி கதை சொல்லும் அம்மம்மா அப்பம்மா
உன் நினைவுகளோடு ....

என் தாய்க்கு பின் என் தாரமாய் தாயாக ஆனவளே
உன் பாதம் சிவனடியில் என் பாதம் உனதடியில்
நேசம் மரிக்கவில்லை நினைவுகள் கலையவில்லை
மனை வாழ்வுதனில் கை கோர்த்த நாட்கள் தான் மீண்டிடுமோ

கண்ணீரில் கரைந்திடும் கண்களும் காணுமோ அம்மா
சொல்லாத் துயர் துடைக்கும் கைகளும் தலை கோதுமோ
இமைக்கும் பொழுதுகளில் கலைகிறது உன் விம்பம்
மனசெல்லாம் உன் நினைவுகளில் வாய் பேசும் மொழியாக

பண்பும் பாசமும் அன்பும் அறநெறியில்
எம் இல்லறம் சிறக்க சொல்லறம் புகட்டி நின்றாய்
பாசமிகு மாமியே இன்பமுறும் வாழ்வோடு நீ எங்கே
அன்னையை போலே அன்பினில் அணைத்துக்கொண்டாய்

வேண்டும் என்றால் வருவாயா அம்மம்மா அப்பம்மா
பண்பினையும் பாசத்தினையும் காட்டி நின்றாய்
அறியும் அறிவை புகட்டி சென்றாய் - அம்மம்மா அப்பம்மா
தொழுவோம் உன்னைத் தொடர்வோம் மரபாக

சிந்தையிலே மறவாத நினைவுகளில் வாழ்கின்றீர்கள்
நேச நெஞ்சங்கள் அறிந்து கொள்ளும்
சொல்லிவிடும் தூரம் சொர்க்கம் இருந்திருந்தால்
புன்னகையில் பூத்திருப்பீர்கள் எம்மோடு

உங்கள் பிரிவால் நெஞ்சம் தனில் வாடும்
உங்கள் குடும்பத்தினர்

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

சடங்குகள்

இறுதிக்கிரியை (Uk)
21 January, 2018 00:00 AM To 00:00 AM
uk.

தொடர்புகள்

உலகநாதன்(கணவர்)
7404821579 7404821579