தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவு

37shares

உலகின் பழமையான செம்மொழிகளாக, தமிழ், சமஸ்கிருதம், ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன், சீனம் ஆகிய ஆறு மொழிகள் அறியப்படுகின்றன.

ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் அதன் இலக்கிய வளங்கள் செழுமை மிகுந்ததாக இருக்க வேண்டும். அது மற்ற மொழிகளை சாராததாக இருக்க வேண்டும்.

தனித்து இயங்கும் ஆற்றல் அந்த மொழிகளுக்கு இருக்க வேண்டும். இந்த வரையறைகளைப் பூர்த்தி செய்யும் மொழிகள் செம்மொழிகளாக விளங்கும்.

இந்தியாவில் ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் அந்த மொழி ஆயிரம் ஆண்டு பழமையானதாக இருக்க வேண்டும். அந்த மொழியின் தொடக்ககால இலக்கியங்கள் சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற வரையறைகள் உண்டு.

அதன் அடிப்படையில் 2004ம் ஆண்டு ஜூன் 06 ஆம் திகதி தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழியும் தமிழ் தான்.

ஆனால் அப்போது தமிழ் மொழி ஆயிரம் ஆண்டு பழமையானது எனக் கூறி செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி என பெருமையாகக் குறிக்கப்படும் தமிழினத்தின் மொழியை ஆயிரம் ஆண்டு பழமையானது என்று கூறியது அதன் தொன்மையைக் குறைக்கும் முயற்சி என விமர்சிக்கப்பட்டது.

நீண்ட இயற்கை அனர்த்தங்களை, நீண்ட பெரும் இன அழிப்புகளை, மிகப்பெரும் இடப்பெயர்வுகளை என சொல்லில் அடக்க முடியாத வரலாற்று துயர்களை தமிழ் சமூகம் கடந்த காலங்களில் எதிர்கொண்டுள்ளபோதும் இன்னும் அசைக்க முடியாத சக்தியாக தமிழர்களின் பெருமைக்கான முழுமையான அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் தமிழ் மொழி உலகுள்ள வரையிலும் வாழும்.

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

சற்று முன்னர் யாழில் இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!

சற்று முன்னர் யாழில் இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!