அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதி!

25shares

உடல்நலக்குறைவால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மருத்துவப் பரிசோதனைக்காக வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனியில் வைகோ மேற்கொள்ளவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.