காதலனுடன் ஓடிய மகளுக்கு தாயார் செய்த செயலால் அதிர்ச்சியில் உறைந்த கிராமம்!

197shares

காதலனுடன் ஓடிய கல்லூரி மாணவிக்கு, பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் கிரமத்திலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு தெருவில் வசித்துவரும் பன்னீர் செல்வம் என்பவரின் 19 வயது மகள் அபி என்பவர் மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்தே ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.!

அபி தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சந்தோஷ் என்பவரை காதலித்துள்ளார், சந்தோஷின் நடவடிக்கை சரியில்லாததால் தனது மகளின் காதலை தாயாரான அமராவதி ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இரு குடும்பத்துக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் சந்தோஷ் தனது குடும்பத்தினருடன் இடையன்குடி சாலையில் புதிய வீடுகட்டி அங்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் பலமுறை கண்டித்தும் காதலை கைவிட மறுத்த அபி கடந்த 14 ம் திகதி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலன் சந்தோசை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இதனால் ஆவேசமான அமராவதி தனது பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்ட தனது மகள் அபியை இறந்து விட்டதாக ஊராருக்கு அறிவிப்பதற்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டியது தெரியவந்தது.

அபியுடன் படித்த கல்லூரி மாணவிகள், தோழிகள் மட்டுமல்லாமல் அந்த பகுதி மக்கள் உயிரோடு இருக்கும் பெண்ணுக்கு ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.