செல்போன் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை; பரிதாபமாக பலியான இளைஞன்!

1237shares
Image

திடீரென சூடாகி செல்போன் வெடித்ததில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இந்தியா, உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

உத்தரபிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியில் உள்ள கோபால்பூரில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது வீட்டில், செல்போனை சார்ஜ் செய்துள்ளார். சிறிது நேரத்தில், சார்ஜ் ஏறிக்கொண்டு இருந்தபோதே, புகை மற்றும் சப்தத்துடன் செல்போன் வெடித்துள்ளது.

செல்போன் அருகே இருந்த இளைஞர் இதில் பலத்த காயம் அடைந்தார். உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மலிவு விலையில் கிடைக்கும் சார்ஜர்கள் இதுபோன்ற விபத்துக்களில் முக்கிய பங்கு வகிப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகின்றனர். மின்சாரத்தை செல்போனுக்கு எடுத்துச் செல்லும் போது, மலிவு விலை சார்ஜர்கள் முறையாக இயங்காது. இதனால், அதிகளவில் மின்சாரம் செல்போன் பேட்டரிக்கு செல்லும்.

அப்படி செல்கையில் பேட்டரியானது சூடாகி, வெடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் செல்போன் சார்ஜர்கள் வாங்கும்பொது செல்போன் பாவனையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்


You May Like This

இதையும் தவறாமல் படிங்க