மனைவியை, கணவனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தமிழகம் சேலம் அருகே இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.,
கங்காபுதூர் பகுதியை சேர்ந்த மோகனேஸ்வரி என்ற பெண்ணுக்கும், கோபி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
கோவையில் வசித்து வந்த தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதை அடுத்து, கணவனை பிரிந்த மோகனேஸ்வரி சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து வந்த மோகனேஸ்வரியை மதுபோதையில் வழிமறித்த கணவன் கோபி, அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த வீராணம் பொலிசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக விசாரணையை நடந்த சேலம் மாநகர காவல் ஆணையர், உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.