என்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் மனைவியின் முறைப்பாட்டால் பரபரப்பு!

839shares

தனது கணவரை சுட்டுக்கொன்ற இடத்திலேயே தன்னையும் கொலை செய்து விடுமாறு என்கவுண்டரில் கொல்லப்பட்டவரான சின்னகேசவலு என்பவரின் மனைவி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் அண்மையில் பிரியங்கா ரெட்டி (வயது 26 ) என்ற கால்நடை மருத்துவர், நால்வரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

நேற்றையதினம் 4 குற்றவாளிகளும் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குற்றவாளிகளில் ஒருவரான சின்ன கேசவலு என்பவரின் மனைவி காவல் துறையினரிடம் ஒரு முறையீட்டை முன்வைத்துள்ளார்.

“எங்கள் இருவருக்கும் திருமணமாகி 1 வருடமே ஆகியுள்ளது. தற்போது நான் 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன். என் கணவரை சுட்டுக்கொன்ற அதே இடத்திலேயே என்னையும் சுட்டுக்கொலை செய்து விடுங்கள்” என்று அழுது புலம்பியுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பு சின்னகேசவலுவின் தாயார் என் மகனை எரித்து கொன்று விடுங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
loading...