நிவர் புயல் கரையை கடக்க மேலும் தாமதமாகும் ( மூன்றாம் இணைப்பு)

387shares

வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி அருகே கரையை கடந்து வருகிறது. இந்த புயல் நள்ளிரவு 3 மணியளவில் கரையை கடக்கும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

ஆனால், புயலின் மையப்பகுதி கடக்கும் வேகம் மெதுவாக உள்ளதால் நிவர் புயல் கரையை கடக்க மேலும் கால தாமதம் ஆகும் என வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில்

நிவர் புயல் 16 கிலோ மீட்டர் வேகத்தில் மிகவும் மெதுவாக வருவதால் புயல் கரையை கடக்க மேலும் 4 மணி நேரம் ஆகலாம்.

நிவர் புயல் புதுச்சேரியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவேளை புயல் கரையை கடந்து வரும் நிலையில் புதுச்சேரி, சென்னையில் மழை பெய்து வருகிறது. புயலின் மையப்பகுதி 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இரண்டு மணிநேரத்தில் கரையை கடக்கவுள்ள புயலின் மையப்பகுதி ( இரண்டாம் இணைப்பு)

நிவர் புயலின் மையப்பகுதி இன்னும் 2 மணி நேரத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது.

நிவர் புயலின் தற்போதைய நிவரம் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:-

அதிதீவிர நிவர் புயல் வங்கக்கடலில் தற்போது கடலூரில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

அதேபோல் புயல் சென்னையில் இருந்து தெற்கே-தென்மேற்கே 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

புயலின் மையப்பகுதி கடந்த 6 மணி நேரமாக 16 கிலோ மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வந்துள்ளது.

நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி கடற்கரை அருகே அடுத்த 1 முதல் 2 மணி நேரத்தில் (நள்ளிரவு 2 மணி முதல் 3 மணியளவில்) கரையை கடக்கும்.

அப்போது புயல் காரணமாக காற்றின் வேகம் 120 முதல் 130 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும். அதிகபட்சமாக 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையை கடக்கத் தொடங்கியது நிவர் - மின்சாரம் துண்டிப்பு -மழை நீடிக்கும்

நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீட்டர் தொலைவில் இன்றிரவு கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாக தமிழக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நிவர் புயல் புதுச்சேரியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.

முழுவதுமாக கரையை கடக்க அதிகாலை 3 மணியாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நிவர் கரையைக் கடக்க தொடங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை முழுவதும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சென்னையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
கோட்டாபய அரசின் மோசமான வாதம் -பெரும் துயரத்தை ஏற்படுத்தும் - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை

கோட்டாபய அரசின் மோசமான வாதம் -பெரும் துயரத்தை ஏற்படுத்தும் - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை

யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடித்தழிப்பு- மக்கள் அனைவருக்கும் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடித்தழிப்பு- மக்கள் அனைவருக்கும் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

ஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்!