இரவில் கெட்ட கனவு வருகின்றதா? இதை மட்டும் செய்யுங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

171shares

சில பேர் இரவு நேரத்தில் படுத்த உடனேயே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விடுவார்கள். அதற்கு முதல் காரணம், அவர்கள் மனதில் நிம்மதி இருக்கும், உடல் உழைப்பு அதிகமாக இருக்கும்.

நிறைய பேருக்கு என்னதான் உடல் உழைப்பு இருந்தாலும், இரவு நேரத்தில் சரியான தூக்கம் இருக்காது. மன நிம்மதி இருந்தாலும், கெட்ட கனவுகள் வந்து பயமுறுத்திக் கொண்டே இருக்கும்.

முதலில் கெட்ட கனவு வருவதற்கு நம்முடைய தூங்கும் அறைகளில் நாம் செய்யும் தவறுகள் தான் முதற்காரணம். சில பேருடைய வீடுகளில் கட்டில்களில் மேல் விரித்திருக்கும் விரிப்புகளை ஒரு மாதம் ஆனால் கூட துவைக்காமல் இருப்பார்கள். கட்டிலானது ஒரு மூலையில் சுவரை ஒட்டி இருக்கும்.

தூசு தும்புகள், ஒட்டடைகளில் எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். அது நம்மை நிம்மதியாக தூங்க விடாது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் படுக்கை விரிப்புகளையும், தலையணை உறைகளையும் துவைத்து பயன்படுத்த வேண்டும் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

பாயில் தூங்குபவர்கள் தூக்கம் வரவில்லை என்று சொல்லுவார்கள். பாயில் தூங்கினாலும் இதே முறைதான். அந்த பாயை தரையில் போட்டு தூங்குகின்றோம் என்றால் வாரத்திற்கு ஒரு முறையாவது அதை துவைத்து வெயிலில் காய வைத்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

சரி, இவ்வளவு சுத்தம் செய்து உங்களுக்கு தூக்கம் வரவில்லையா? இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். பொதுவாக கெட்ட கனவு வருகிறது, தூக்கம் வரவில்லை என்றால் ஒரு பாத்திரத்தில் கல்லுப்பு நிரப்பி தலைமாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். இது நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.

2 நாட்களுக்கு அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை இந்த உப்பை மாற்றினால் போதும். அந்த உப்பின் மேல் இருக்கும் கற்பூரத்தையும், எலுமிச்சை பழத்தையும் கால் படாத இடங்களில் போட்டுவிடலாம். தொடர்ந்து 15 நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு, 3 நாட்களுக்கு ஒருமுறை உப்பை தண்ணீரில் கரைத்து விட வேண்டும்.

You May Like This Video

Tags : #Life #People
இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்