வெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்!

775shares

வெளிநாடொன்றின் கடற்கரை நகரொன்றில் மிகவும் பசியுடனும் கடுமையான நீர் சத்து குறைபாட்டுடனும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளைச்சேர்ந்த 65 பேர் அலைந்து திரிந்ததை கண்டதாக மெக்சிக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் எல்லைப்பகுதியை அடையும் நோக்கில் இவர்கள் மிகவும் நீண்ட சிக்கலான பயணத்தை மேற்கொண்டமையே இந்த நிலைமைக்கு ஆளாக காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஏப்பரல் 24 ஆம் திகதி கட்டார் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட இவர்கள் துருக்கியிலிருந்து கொலம்பியாவுக்கு சென்றதாக தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து ஈக்வடோர் பனாமா, மற்றும் குவாத்தமாலா வழியாக மெக்ஸிக்கோவை அடைந்துள்ளனர்.

மெக்ஸிக்கோவில் இருந்து அவர்கள் படகுகளில் ஏறி, கோட்ஸாகோல்கோஸ் ஆற்றில் பயணம் செய்தனர், ஆனால் ஏன் என்று தெரியவில்லை. யு.எஸ். எல்லைக்கு அருகில் இந்த நதி செல்லவில்லை என்றும் அவர்கள் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.