இறுதிப் போரில் சர்ச்சையில் சிக்கிய சவேந்திர சில்வாவினால் மைத்திரிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

50shares

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, நேற்றுடன் அதிகாரபூர்வமாக சேவையில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், இராணுவத்தின் புதிய தளபதியை நியமிப்பது தொடர்பாக கடுமையான இழுபறி தோன்றியுள்ளது.

இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார்.

ஆனால், இறுதிப் போர்க்கால, சர்ச்சைக்குரியவரான அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுவது பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படுவதற்கு, ஜனாதிபதி தனது சொந்த கட்சியின் உறுப்பினர்களிடமிருந்தும் எதிர்ப்புகளை எதிர் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை, ஐ.தே.கவும் இந்த விவகாரத்தில் முரண்பட்டு நிற்கிறது.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நேற்றிரவுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதி நியமிக்கப்படாததால், இராணுவத் தலைமை அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இலங்கை இராணுவம் தற்போது இருந்து வருகிறது.