பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் இராணுவத்தினரால் கைது!

87shares

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் நேற்று இரவு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டிலேயே குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் குறித்த வைத்தியர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் குறித்த வைத்தியர் தேடப்பட்ட ஒருவர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.