சஜித் அணி வகுத்துள்ள வியூகம் -ஐக்கியதேசிய கட்சிக்குள் வெடிக்க காத்திருக்கும் பூகம்பம்!

37shares

எதிர்வரும் செப்ரெம்பர் 6 ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய மாநாடு நடைபெற உள்ளநிலையில் இந்த மாநாட்டில் பாரிய பூகம்பம் ஒன்று வெடிக்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்காவிட்டால் குறித்த தினத்தில் அக்கட்சியின் தலைமைப்பதவி, செயலாளார், பொருளாளர் உள்ளிட்ட சகல பதவிகளையும் கைப்பற்ற சஜித் ஆதரவு அணி வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை அக்கட்சி செயலாளராக நியமிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கட்சி தவிசாளர் பதவி தவிர்ந்த அனைத்து பதவிகளையும் தம்வசப்படுத்த ஐக்கிய தேசிய கட்சி சஜித் அணி வியூகம் வகுத்துவருவதாக கூறப்படுகிறது.