ரணில் ஜனாதிபதியாவதை தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை: வழக்கு விசாரணைகளில் அதிரடித் திருப்பம்!

  • Jesi
  • August 19, 2019
39shares

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதையோ அவர் தலைமையிலான அரசு அமைவதையோ 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மாநாடு காலி முகத்திடலில் நேற்றுமாலை நடைபெற்றது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் நேரடியாகத் தொடர்பு பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில் அதிரடித்திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இது போன்ற செய்திகளோடு இன்றைய காலை நேர செய்திகள் அமைகின்றது.