நான்கரை வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் உறவுகள்

20shares

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆர்.எம்.நகர் பிரதேசத்தை சேர்ந்த ஆண்குழந்தை ஒன்று வீட்டின் பின் பக்கம் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (18) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முகம்மத் சியாத் முகம்மத் ஹதீத் என்ற நான்கரை வயது குழந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

குழந்தையின் உடல் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு , உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.