மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பில் ஆரம்பமானது தீவிர விசாரணை!

49shares

பொகவந்தலாவ சீனாகொலை பூசாரி பிரிவு பகுதியில் உள்ள இரண்டாம் இலக்க தேயிலைமலையில் நேற்றைய தினம் மாலை மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு ஹட்டன் தடைவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் திகதி பொகவந்தலாவ கொட்டியாகலை கிழ்பிரிவு தோட்டபகுதியை சேர்ந்த 42வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பெருமாள் செல்வம் என்பவர் காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினர் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவருவதாவது,

இதேவேளை குறித்த தேயிலே மலையில் இருந்து சீனாகொலை பூசாரி பிரிவை சேர்ந்த அம்மாச்சி விஜயலெச்சுமி தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளை கான் ஒன்றில் கையடக்க தொலைபேசி ஒன்று இருந்ததை இனங்கண்டு அதனை எடுத்து தனது மகனிடம் கொடுத்ததாகவும் குறித்த கையடக்க தொலைபேசிக்கு வேறு ஒரு சிம் அட்டையினை மாற்றி பவனைசெய்து வந்தமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகலுக்கு அமைய கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யபட்டிருந்த எமி இலக்கத்தை கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட போதே இந்த மனித எச்சங்கள் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மீட்கபட்ட மனித எச்சங்கள் தொடர்பில் பெருமாள் செல்வம் நபருடைய மனைவி செந்தமிழ் செல்வி பொலிஸாருக்கு வாக்குமுலம் வழங்கிய போது எனது கணவர் காணாமல் போய் சுமார் ஒன்பது மாதங்கள் கடந்துள்ளது.

நேற்றய தினம் கணவர் வாங்கிய கையடக்க தொலைபேசி பெட்டியினை பொலிஸார் என்னிடம் வந்து கேட்டார்கள். நானும் அதனை வழங்கினேன். அதற்கு பிறகு பொலிஸார் என்னை அழைத்து சென்று குறித்த எச்சங்களை காட்டினார்கள்.

அந்த இடத்தில் கைபகுதியும் பற்களும் எனது கணவர் கானமல் போன நாள் அன்று அணிந்து இருந்த ஆடை என்பன இருந்தன. இதே வேளை குறித்த இடத்தில் கத்தி மற்றும் நஞ்சு குப்பி ஒன்றும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம் பெறவிருப்பதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.