ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு பிழையானது! கோட்டாவை மறைமுகமாக கூறுகிறாரா இவர்

11shares

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட வேட்பாளர் தெரிவு சரியானதல்ல என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

களுத்துறை, பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனது மனச்சாட்சிக்கு அமைய செயற்பட எனக்கு அந்த சுதந்திரம் வேண்டும். இத்தேர்தலில் எமது வேட்பாளர் தெரிவு பிழையானது. இந்நாட்டின் அடுத்த தலைவர் சிறந்த ஜனநாயகப் பண்புகளைக் கொண்டவராகவும், உடனடியாக கோபம் வராத தலைவராகவும் இருத்தல் வேண்டும்.

ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சனம் செய்யும்போது, விசேடமாக ஊடகவியலாளர்களை துன்புறுத்துபவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக வரக்கூடாது எனவும் நான் பிரார்த்திக்கிறேன் எனவும் குமார வெல்கம எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னர் கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவை ஆதரிக்கப்பபோவதில்லை என குமாரவெல்கம தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க