தனிப்பட்டரீதியில் எவரும் தம்மை வேட்பாளராக அறிவிக்கலாம்! இறுதியில் கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்!

13shares

தனிப்பட்ட ரீதியில் எவரும் தம்மை ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கலாம். ஆனால் இறுதியில் கட்சி எடுக்கும் இறுதி முடிவுக்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

கெக்கிராவையில் பயிர் இழப்பீட்டுக்கான நட்டஈட்டை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

முன்வைக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகள் குறித்து கட்சித் தலைவர்களிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து வேட்பாளரை முடிவு செய்வார்கள்.

அமைச்சர் சஜித் பிரேமதாசா மட்டுமல்ல, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூட ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளராக தன்னை முன்மொழிந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையான முடிவுகளை எடுக்க மாட்டார்.பிரதமர் அனைத்து கருத்துக்களையும் கேட்டு இறுதி முடிவை எடுப்பார்.

ஐக்கியதேசிய கட்சியென்பது ஒரு தனிநபர் அல்லது குழுவுக்கு சொந்தமான கட்சி அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.