பேருந்தில் பயணி ஒருவர் செய்த செயல்: பொதுமக்களால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

  • Jesi
  • August 19, 2019
34shares

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை திருகோணமலை பயணிகள் பேருந்தில் பணப்பையை திருடிய நபர் ஒருவரை பயணிகளினால் பிடிக்கப்பட்டு புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று (19)காலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டாம் வட்டாரம்,புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாகவும்,

சம்பவம் பற்றி பொலிஸார் தெரிவிக்கிகையில்:

திருகோணமலையிலிருந்து புல்மோட்டைக்கு சென்ற பேருந்து தனியார் பஸ்ஸில் புல்மோட்டை பகுதியை நெருக்கும் போது பயணியொருவரின் பணப்பையை சந்தேக நபர் திருடியதை மற்ற பயணியொருவர் கண்டு சந்தேக நபரை நையப்புடைத்து புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.