மருத்துவர் கைது: முற்றாக மறுக்கும் பொலிஸார்! மௌனம் காக்கும் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்

  • Jesi
  • August 19, 2019
49shares

பளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபனை தாங்கள் கைது செய்யவில்லையென சிறிலங்கா பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு பளை வைத்தியசாலையில் வைத்து கைதாகிய சிவரூபன் தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் மௌனம் காத்துவருகின்றது.

அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு பளை வைத்தியசாலையில் வைத்து கைதாகியிருந்தார்.

வைத்தியகலாநிதி சிவரூபன் பத்திற்கும் குறைவான வயதுடைய மூன்று குழந்தைகளது தந்தையாவார்.

மட்டக்களப்பினை சேர்ந்த சிவரூபன் யாழில் திருமணம் முடிந்திருந்ததுடன் யாழில் வசித்தும் வருகின்றார்.

இதேவேளை கைதின் போது தனது கடமைகளை சக வைத்திய அதிகாரியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தே பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் அவர் கைதாகி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.