கொழும்பிலிருந்து அறுவகாட்டிற்கு அனுப்பப்பட்ட குப்பை! இடைவழியில் நடந்த அசம்பாவிதம்!

20shares

கொழும்பில் இருந்து அறுவக்காடு குப்பை சேகரிப்பு பகுதிக்கு குப்பைகளை ஏற்றிச்சென்ற டிப்பர் வண்டிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் - மன்னார் பிரதான வீதியில் வைத்து இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குப்பைகளை ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர் வண்டிகள் மீதே இவ்வாறு கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதனால் டிப்பர் வண்டிகளுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னரும் அறுவக்காடு பகுதிக்கு குப்பைகளை கொண்டு வருவதற்கு மக்கள் பல்வேறு சந்தர்பங்களில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.