பெரும் சர்ச்சைக்கு மத்தியில் வெளியாகிய அறிவிப்பு: போர்க் குற்றவாளிக்கு உயர் பதவி

  • Jesi
  • August 19, 2019
28shares

மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமனம் பெற்றார்.

இராணுவத் தளபதியாக பணியாற்றிய லெப்ரினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவின் பதவி நேற்றிரவுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஷவேந்திரவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இப்பதவிக்கான பட்டியலில் முதன்மையான மேஜர் ஜெனரல்களான சத்தியப்பிரிய லியனகே, தர்சன ஹெட்டியாராட்சி, சவேந்திர சில்வா மற்றும் குமுது பெரேரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படு சவசேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

1964 ஆம் அண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி மாத்தளையில் பிறந்த மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார். ஆரம்ப பயிற்சியினை முடித்துக்கொண்டு 1986 ஆம் ஆண்டு வெளியேறிய அவர் இராணுவத்தின் உயர் பதவிகள் பலவற்றை வகித்து வந்துள்ளார்.

யுத்த காலத்தின் போது பல்வேறு துறையில் திறமைகளை வெளிக்காண்பித்த இவர், இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக சேவையாற்றினார்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியல் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராகவும் பிரதி நிரந்தரவதிவிட பிரதிநிதியாகவும் சேவையாற்றிவிட்டு நாடு திரும்பிய அவர், இறுதியாக இராணுவத்தின் நிறைவேற்று ஜெனரலாகவும் கஜபா ரெஜிமன்டின் கேர்ணலாகவும் சேவையாற்றி வந்த நிலையில் இன்று இராணுவத் தளபதியாக நியமனம் பெற்றுள்ளார்.

உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டுக்கள் குவிந்தமை குறிப்பிடத்தக்கது.