யாழில் கெப்ரக வாகனத்தை துரத்திச் சென்ற அதிரடிப்படையினர் - கொண்டு சென்ற பொதிகளை வீசிவிட்டு தப்பிச்சென்ற நபர்கள்!

240shares

யாழ்ப்பாணம் நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் ரக வாகனத்தில் சென்றவர்களை சிறப்பு அதிரடிப் படையினர் துரத்திச் சென்ற போதும் அவர்கள் கொண்டு சென்ற பொருளை வீசியெறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடி – துன்னாலை வீதியில் நேற்றிரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

“ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினர், குறித்த கெப் ரக வாகனத்தைத் துரத்திச் சென்றனர். எனினும் அதில் பயணித்தவர்கள் கஞ்சா பொதிகளை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.

65 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டன. அவை நெல்லியடிப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கெப் ரக வாகனம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதனை தேடி சிறப்பு அதிரடிப் படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க