விபத்தில் காயமடைந்த சிறுவனின் உயிர் பிரிந்தது! சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

  • Sethu
  • September 18, 2019
236shares

மட்டக்களப்பு மகிழுர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுவன் ஒருவர் இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மின்கம்பத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரியகல்லாறு,காளிகோவில் வீதியை சேர்ந்த ஜெ.கேதுசன்(13வயது)என்னும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் மரணம் காரணமாக பெரியகல்லாறு கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற மோட்டார் வாகனத்தில் தலைக்கவசம் இன்றி சென்ற சிறுவனே இவ்வாறு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க பொலிஸாரின் மற்றுமொரு அராஜகம் அம்பலம் - 57 பொலிஸார் கூட்டாக பதவி விலகினர்

அமெரிக்க பொலிஸாரின் மற்றுமொரு அராஜகம் அம்பலம் - 57 பொலிஸார் கூட்டாக பதவி விலகினர்

கைது செய்யப்படுவாரா நடிகர் சிவகுமார் -சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

கைது செய்யப்படுவாரா நடிகர் சிவகுமார் -சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

ஸ்ரீலங்கா வரும் சுற்றுலா பயணிகள் ஐந்து இரவுகள் தங்கியிருப்பது கட்டாயம்

ஸ்ரீலங்கா வரும் சுற்றுலா பயணிகள் ஐந்து இரவுகள் தங்கியிருப்பது கட்டாயம்