கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தை புறக்கணித்தது ரெலோ!

36shares

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ரெலோ கட்சி புறக்கணித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து உரையாற்றுவர் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் ரெலோ கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை, கடந்த புதன்கிழமை வவுனியாவில் கூடிய ரெலோ சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு எனத் தெரிவித்து இருந்தமையும், இன்று யாழில் ரெலோவின் ஒரு பகுதியினர் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் குறித்த கூட்டத்தை ரெலோ புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

முக்கிய தேவாலயங்களிற்கு வெடி குண்டு மிரட்டல்? கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது!

முக்கிய தேவாலயங்களிற்கு வெடி குண்டு மிரட்டல்? கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது!