நுவரெலியாவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஸ மேடையில் தடுமாறியுள்ளர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
பிரசாரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வருகைத் தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மாலை அணிவித்து வரவேற்றார்.
இதன்போது மேடையில் நின்றுக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ மேடையில் விழ தடுமாறிய நிலையில், அந்த மேடையில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மீது மோதுண்டே, கோட்டாபய ராஜபக்ஸ விழ தடுமாறியதாகவும் எனினும் தொன்டமானை பிடித்துக்கொண்டு அவர் தப்பித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எனினும் கோட்டாபய விழப்போனதை அறிந்த மஹிந்த உடனேஅவரை பார்க்கச் சொல்லி உத்தரவிட்டதையும், அவர் தடுமாறியதையும் காணக்கூடியதாக உள்ளது.
Hi @RajapaksaNamal can you tell me who is the candidate. Why are they fighting in the stage. pic.twitter.com/mWC7H56Sw6
— Ranjan Ramanayake (@RamanayakeR) November 9, 2019
Hi @RajapaksaNamal can you tell me who is the candidate. Why are they fighting in the stage. pic.twitter.com/mWC7H56Sw6
— Ranjan Ramanayake (@RamanayakeR) November 9, 2019