வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன? வெளிவரும் பகீர் தகவல்!

161shares


கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்தவேளை வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டபின் அவர்களின் வயிற்றுப்பகுதி வெட்டப்பட்டு முதலைகளுக்கு இரையாக்கப்பட்டனர்.

இவ்வாறு கடத்தலுடன் தொடர்புடைய வெள்ளை வானின் சாரதி என தெரிவிக்கப்படும் நபர் இன்றையதினம் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் மேற்கண்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு

பொலிஸார்,இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுப்பிரிவினரே வெள்ளை வான் கடத்தலில் ஈடுபட்டவர்களாவர். கடத்தப்பட்டவர்களின் பற்கள் மற்றும் நகங்கள் பிடுங்கப்படும்.அவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவார்கள்.

பின்னர் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்படுவார்கள்.தொடர்ந்து அவர்களின் வயிற்றுப்பகுதி வெட்டப்பட்டு முதலைகளுக்கு இரையாக்கப்படுவார்கள்.

அத்துடன் வன்னியிலிருந்து பிரபாகரனின் பணத்தை கொழும்புக்கு கொண்டு வந்தது நானே. அதனை கொடுக்கவில்லை எனத் தெரிவித்து என்னையும் கடத்தினர் என அவர் தெரிவித்தார்.

இவரின் இந்த பகீர் தகவலால் மக்களிடையே பாரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்