அதிபர் பதவிக்காலம் முடியும் நிலையில் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மைத்திரியின் நடவடிக்கை!

1439shares

பதவியிலிருந்து விலகும் நேரத்தில் மைத்திரிபால சிறிசேனா தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவருக்கு மன்னிப்பு வழங்கியிருப்பது தொடர்பில் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் விசனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

இலங்கையில் சுவீடன் நாட்டு பெண்ணின் தலையை 64 துண்டுகளாக நொறுக்கி கொலை செய்ததாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு அந்நாட்டு அதிபர் சிறிசேனா மன்னிப்பு வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பெரும் கோடீஸ்வரர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜெயமஹா. இவர் 2005 ஆம் ஆண்டு கொழும்புவுக்கு சுற்றுலா வந்த சுவீடன் நாட்டு பெண் யுவோன் ஜான்சன் என்பவரை அடித்து கொன்று அவரது மண்டையை 64 துண்டுகளாக நொறுக்கியதாக மரணத் தண்டனை விதித்து இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்த நிலையில் தனக்கு மன்னிப்பு வழங்க கோரி ஜெயமஹா அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொண்ட அதிபர் சிறிசேனா, கொலை வழக்கில் அவனுக்கு மன்னிப்பு வழங்கினார். இதையடுத்து ஜெயமஹா வெலிகட சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் பதவிக்காலம் முடியும் நிலையில் சிறிசேனா கொடிய குற்றவாளிக்கு வழங்கியுள்ள மன்னிப்பு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Like This

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

சற்று முன்னர் யாழில் இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!

சற்று முன்னர் யாழில் இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!