கிளிநொச்சியில் கோரம் : இளம் தாய் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை!

425shares

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 31 வயதான அன்ரன் ஜெராட் மேரி அகிலா என்ற 9 மாத குழந்தையின் தாயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கராயன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Like This

இதையும் தவறாமல் படிங்க