சிறுபான்மை மக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுப்பவர்கள்!

18shares

சிறுபான்மை மக்கள் நியாயத்தின் பக்கம் நிற்கக்கூடியவர்கள். அவர்களுக்கு செய்தி முந்திப் போகின்றதோ பிந்திப்போகின்றதோ அவர்கள் சரியான முடிவினை எடுப்பவர்கள். இந்தத் தேர்தலிலும் எடுப்பார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை (11) அவரது மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரவித்த அவர்,

அண்மையில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவையும், நேற்றையதினம் ஜனாதிபதி வேட்பாளரும், வீடமைப்பு அமைச்சராகவும் இருக்கின்ற சஜித்தபிரேமதாச அவர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக சந்தித்தோம்.

பிரதம மந்திரி அவர்களைச் சந்தித்த வேளை, குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காணக்கூடிய பிரச்சினைகள், மட்டக்களப்பில் உள்ள பிரச்சினைகள் சொல்லப்பட்டன. முக்கியமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயம் முக்கியமானது என்ற வகையில் கடந்த காலங்களிலிருந்து ஏமாற்றப்பட்டதொரு விடயமாக இருந்தது. இந்த விடயத்தை சில எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் எடுத்திருக்கிறார்கள். எங்களது பிரதேசத்தில் காணப்படுகின்ற பல தொழில்சாலைகள் மூடப்பட்டுக்கிடந்தன். அந்த தொழில் சாலைகளைத் திறந்து இளைஞர் யுவதிகளான பட்டதாரிகளிலிருந்து சாதாரண தரம் சித்தியடைந்தவர்கள், சித்தியடையாதவர்கள் வரை தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் எனும் விடயம்.

படுவான்கரைக்கும் எழுவான்கரைக்குமாதன போக்குவரத்து அன்று தொட்டு இன்றுவரை ஒரு சுமுகமான முறையில் இல்லை. ஏற்கனவே கன்சாட்டில் பதிவு செய்யப்பட்ட பல பாலங்கள் இருக்கின்றன. அதே போன்றுதான், வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை விரைவாக பெற்றுக் கொடுக்க வேண்டும். விவசாயத்தை விருத்தி செய்வதற்காக கிரான்புல் அணைக்கட்டு போன்றவற்றினை அமைத்துத் தரவேண்டும்.

நீர்ப்பாசனக் குளங்களைப் பொறுத்தவரையில், குளங்கள், அதற்குரிய முறையான பாசனங்களை மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்பட வேண்டும். அதே போன்று காணாமலாககப்பட்டவர்களது விடயங்கள் முறையாக அணுகப்பட வேண்டும் என்ற விடயங்கள். அத்துடன், சமத்துவம் சமநீதி இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும். பாரபட்சம் பக்கச்சார்பு இருக்கக் கூடாது இனத்தின், மதத்தின் காரணமாக புறக்கணிப்பு, ஒதுக்குதல் இருக்கக்கூடாது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு, பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்கு விசேடமான பொறிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். என்கின்ற விடயங்கள் சொல்லப்பட்டன. நீதித்துறை சரியாகச் செயல்படுவதற்குரிய பொறிமுறைகள் நீங்கள் செய்திருக்கிறீர்கள் அது தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். அதிகாரப்பகிர்வுமூலம் பிரிக்கப்படாத நாட்டுக்குள் இந்த தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்கிற விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

மேய்ச்சல்தரை தொடர்பான விடயங்கள், பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எழுத்து மூலம் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.

எனவே இந்த விடயங்களை தேர்தலின் பின்பு கவனம் எடுத்துச் செயற்படுவதாகச் சொன்னார்கள். பொறுப்புகளை நாங்களும் எடுத்துச் செயற்பட வேண்டும் என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார்.

நாங்கள் எடுத்த முடிவு காலம் தாழ்த்தி எடுக்கப்பட்டதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பில் 3 கட்சிகள் உள்ளன. அவற்றின் முடிவுகளின் பின்னர்தான் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆரம்பத்திலிருந்து நாங்கள் இந்த ஆதரவினைக் கொடுப்பதாக அறிவித்திருந்தால் அடிப்படைவாதிகள் இனவாதப்பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. எங்கள் மக்களைப் பொறுத்தவரையில் சரியானவற்றை சரியான முறையில் முடிவெடுப்பவர்கள்.

கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள். மட்டக்கள்ப்பில் 82 சதவீதத்துக்கு அதிகமான மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள்;. 14 வீதமானவர்களே மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்திருந்தார்கள்.

எனவே சிறுபான்மை மக்கள் நியாயத்தின் பக்கம் நிற்கக்கூடியவர்கள். அவர்களுக்கு செய்தி முந்திப் போகின்றதோ பிந்திப்போகின்றதோ அவர்கள் சரியான சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுப்பவர்கள். இந்தத் தேர்தலிலும் எடுப்பார்கள் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்