யாழில் சைவ சமய பிராத்தனை தொடர்பாக பிரபல தனியார் பாடசாலை நிர்வாகிகளுக்கு எழுத்து மூலம் விண்ணப்பம்!

137shares

யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல தனியார் பாடசாலையான சென்ஜோன்ஸ் கல்லூரி ஆசிரியர் சங்கம் சைவ சமய பிராத்தனை தொடர்பாக மாணவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கையின் அடிப்படையில் கல்லூரியின் நிர்வாகிகளுக்கு எழுத்து மூலம் விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

நீண்டகாலமாக புதன்கிழமைகளில் பாடசாலையில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைகள் பாடசாலை தேவாலயத்திலும் சைவ மத பிரார்த்தனைகள் பாடசாலையின் Peto மண்டபத்திலும் இடம்பெற்று வந்தன. ஆனால் சமீபகாலமாக கிறிஸ்தவ மத பிராத்தனைகள் Peto மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் சைவ மத பிரார்த்தனைகளுக்கான ஒரு இடம் ஒதுக்கி தரப்படவில்லை என்பதால் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்படுகிறது.

பெரும்பான்மையாக சைவ சமயத்தை சார்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிமாணவர்கள் தமது மதப் பிரார்த்தனைகளை நடத்துவதற்கு சரியான ஒரு இடத்தை ஒதுக்கி தருமாறு ஆசிரியர்களிடம் பேசியதன் அடிப்படையில் ஆசிரியர் சங்கம் கல்லூரியின் நிர்வாகத்திற்கு இந்த எழுத்துமூல வேண்டுகோளை அனுப்பியுள்ளது. சென்.ஜோன்ஸ் கல்லூரி ஒரு கிறிஸ்தவ கல்லூரியாக இருந்தபோதிலும் அங்கு கல்வி கற்கும் மாணவர்களிடம் எந்த மத பாரபட்சமும் இன்றி அவர்களின் வழிபாட்டிற்கும் அவர்களின் மதம் சார்ந்த கல்விக்கும் பூரண சுதந்திரத்துடன் செயல்பட்டு வந்ததாகவும், மறைந்த இந்த கல்லூரியின் அதிபர் எஸ்.தனபாலன் அவர்களின் நிர்வாகத்திற்கு பின்னர் அதிபர்களாக வந்தவர்கள் இவ்வாறான மதரீதியான பாரபட்சங்களை கல்லூரிக்குள் புகுத்த முனைகிறார்கள் என கல்லூரியில் சில பழைய மாணவர்கள் தெரிவித்தனர்.

கல்விக்கூடங்கள் மதச்சார்பற்ற நிலையில் மாணவர்களுக்கு அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கைகள் உடன் பயிலும் இடங்களாக இருக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படையாகும். சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் கல்லூரி நிர்வாகமும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்