பிறந்த நாள் நிகழ்வை முற்றுகையிட்ட பொலிஸார்! அடுத்து நடந்தது...!

57shares

தென்னிலங்கையில் நடத்தப்பட்ட பிறந்த நாள் நிகழ்வொன்றை சுற்றிவளைத்த பொலிஸாரால் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெந்தோட்டை பிரதேசத்தில் பிறந்த நாள் விருந்தின் போது போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த விருந்திற்கு வந்தவர்கள், ஹெரோயின், கஞ்சா, போதை மாத்திரை ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளனர. இந்த சந்தேக நபர்கள் 19 - 48 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பெந்தோட்டை, கொஸ்கொட, அஹுங்கல்ல, பேருவளை, ஹட்டன், தெஹிஅத்தகண்டிய ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

ஹெரோயின் வைத்திருந்த ஒரு சந்தேக நபரை 3 மாதங்களுக்கு புனர்வாழ்வழிப்பதற்கு புஸ்ஸ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விருந்தை ஏற்பாடு செய்த பிரதான சந்தேக நபர்கள் இருவர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க