குடைசாய்ந்த இயந்திரம்! ஆபத்தான நிலையில் சாரதி!

33shares

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் வேளாண்மை அறுவடை செய்யும் இயந்திரமொன்று குடை சாய்ந்து விழுந்ததில் இயந்திரத்தின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த அஸாம் முகம்மட் என்ற 39 வயதுடைய ஒருவரே காயங்குள்ளான சாரதியாவார்.

வேளாண்மை அறுவடை செய்வதற்காக உழவு இயந்திரத்திலிருந்து இறக்குவதற்கு முயன்ற போதே குடை சாய்ந்து விழுந்துள்ளதாகவும், இயந்திரம் தலைகிழாக விழுந்ததினாலே சாரதிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குடைசாய்ந்த இயந்திரத்தினை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
வழி தெரியாமல் தடுமாறிய சீனா! வேறு வழியின்றி அவசர அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவு

வழி தெரியாமல் தடுமாறிய சீனா! வேறு வழியின்றி அவசர அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவு

யாழ். இளைஞர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் படைப்பு! வைரலாகும் பாடல்- குவியும் பாராட்டுக்கள்

யாழ். இளைஞர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் படைப்பு! வைரலாகும் பாடல்- குவியும் பாராட்டுக்கள்

ஒட்டுமொத்த தமிழ் தலைவர்களையும் தட்டி எழுப்பியுள்ள கோட்டாபய! என்ன செய்யப்போகிறார்கள் ஈழத் தமிழர்கள்?

ஒட்டுமொத்த தமிழ் தலைவர்களையும் தட்டி எழுப்பியுள்ள கோட்டாபய! என்ன செய்யப்போகிறார்கள் ஈழத் தமிழர்கள்?

loading...