ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு!

427shares

இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகள் இந்த வருடத்துக்குள் முடிவுறுத்த வேண்டும் என முல்லைத்தீவு நீதிமன்று அறிவித்துள்ளதோடு, இந்த வழக்குகள் யாவும் இந்த வருடத்துக்குள் முடிவடைவதற்காக ஒவ்வொரு வழக்குக்கும் வெவ்வேறான திகதிகள் இடப்பட்டு ஒவ்வொரு வழக்கும் முடிவடைய செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது என மனுதாரர்கள் சார்பாக முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி கே .எஸ் ரத்னவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் முல்லைத்தீவு வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்க்கொணர்வு மனுமீதான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட 7 பேருடைய ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தளபதிகளில் ஒருவரான எழிலன் உள்ளிட்ட 12 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் கடந்த சில வருடங்களாக முல்லைத்தீவு மாவட்ட .நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவந்த நிலையில் எழிலன் உள்ளிட்ட ஐந்துபேர் தொடர்பான ஆட்க்கொணர்வு வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் மிகுதியாக உள்ளவர்களின் 7 வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது .

இந்நிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டது .

இந்தவழக்கில் மனுதாரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே .எஸ் ரத்னவேல் மன்றில் முன்னிலையாகி வாதாடியிருந்தார் .

இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணைக்காக இராணுவத்தரப்பை சேர்ந்த சட்ட தரணிகள் மன்றுக்கு வருகை தந்த நேரத்தில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதோடு நீதிமன்றை சூழவும் வழமைக்கு மாறாக ஆயுதம் தாங்கிய பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

வழக்கில் மனுதாரர்கள் சார்பாக முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி கே .எஸ் ரத்னவேல் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

காணாமல்ப்போனோருடைய அட்கொணர்வு மனுக்கள் சில அதாவது 7 மனுதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் முதலாவது வழக்கில் சாட்சிதாரரின் சாட்சியங்கள் எடுபட்டு பின்னர் அந்த வழக்கு பிறிதொரு திகதிக்கு தவணையிடப்பட்டது.

மேலும் ஒரு வழக்கு அதில் மனுதாரர் சாட்சியமளித்து அதன் இன்னொரு பகுதியை அடுத்த தவணைக்கு அதாவது ஏப்ரல் 29 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்குகள் யாவும் இந்த வருடத்துக்குள் முடிவடைவதற்காக ஒவ்வொரு வழக்குக்கும் வெவ்வேறான திகதிகள் இடப்பட்டு ஒவ்வொரு வழக்கும் கூப்பிட்டு முடிவடைய செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

யாழில் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று! உறுதிப்படுத்திய வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழில் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று! உறுதிப்படுத்திய வைத்தியர் சத்தியமூர்த்தி