கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட பாடசாலை மாணவன்!

455shares

பாடசாலை மாணவர் ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் ஒன்று இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.

எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினரை வினவியது போது சம்பவம் தொடர்பிலான எந்தவொரு முறைப்பாடுகளும் காவல் நிலையத்திற்கு கிடைக்கவில்லை என இரத்தினபுரி காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், மாணவனின் பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் தற்போது காயங்களுக்கு உள்ளான அந்த மாணவன் இரத்தினபுரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இதேவேளை, இவ்வாறான சம்பவங்களானது இரத்தினபுரி பிரதேசத்தில் ஒரு கலவரத்தைப் போன்று இடம்பெற்று வருவதாக இரத்தினபுரி நகரத்தில் வசித்து வரும் நபரொருவர் தெரிவித்தார்.

You may like this

இதையும் தவறாமல் படிங்க
மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

யாழில் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று! உறுதிப்படுத்திய வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழில் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று! உறுதிப்படுத்திய வைத்தியர் சத்தியமூர்த்தி