பொலிஸாரின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கை -சமுக வலைத்தளங்களில் கடும் கண்டனம்

176shares

தந்தையிடம் விசாரணை நடத்தச்சென்ற பொலிஸார் அவர் வீட்டில் இல்லாதநிலையில் மகனான 14 வயது சிறுவனை பிடித்துச் சென்று தமது காவலில் வைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் இந்த அதிர்ச்சியூட்டும் நடவடிக்கை எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

திருடப்பட்ட கறுவாபட்டையை வாங்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தந்தையிடம் விசாரிக்க வந்தபோது, அவர் வீட்டில் இல்லை என்பது தெரிந்ததும், மேற்படி அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் உடனடியாக தந்தை பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.பின்னர் பொலிசார் சிறுவனை தங்கள் காவலில் இருந்து விடுவித்ததாக தெரியவருகிறது.

இதேவேளை இந்த சம்பவத்திற்கு டுவிட்டரில் கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

ராஜிதசேனராட்ணவை தேடியவேளை பொலிஸார் அவரது மகனை பிடித்துச்சென்றார்களா அல்லது ரவிகருணாநாயக்கவை தேடியவேளை அவரது பெண்பிள்ளைகளை பிடித்துச்சென்றார்களா என்பது தெரியவில்லை என பதிவு செய்துள்ள ஒருவர் இது பொதுமக்களிற்கானதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்கள் வேகமாக சர்வாதிகாரத்தை நோக்கி நகருகின்றோம் என மற்றுமொரு நபர் பதிவிட்டுள்ளார்.

இது சட்டபூர்வமானதா என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ள வேளை மற்றொருவர் காவல்துறையினருக்கு எந்த சட்டமும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்