அமெரிக்க இராஜதந்திரியின் நடவடிக்கையால் பாடங்களை கற்றுள்ள ஸ்ரீலங்கா

93shares

அமெரிக்காவின் சிரேஸ்ட இராஜதந்திரியொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் பிசிஆர் பரிசோதனைகள் உதாசீனம் செய்து நாட்டுக்குள் பிரவேசித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் அனுமதிக்கப்பட்டமை மூலம் பாடங்களை கற்றுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதியின் வெளிவிவகார உறவுகளுக்கான மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, இதன் காரணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இராஜதந்திரிகள் பின்பற்றவேண்டிய புதிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியானது எனவும் தெரிவித்துள்ளார்.

விமானநிலையத்தில் பிசிஆர் பரிசோதனைகள் கட்டாயமாக்கப்படுவதற்கு முன்னரே குறிப்பிட்ட இராஜதந்திரிக்கு இலங்கைக்கு வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 குறித்தும் நாங்கள் இன்னமும் கற்றுவருகின்றோம் விமானநிலையம் மாற்றமடையும் சூழ்நிலைகளிற்கு ஏற்ப தன்னை மாற்றிவருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இராஜதந்திரிக்கான அனுமதியை வழங்கியவேளை விமானநிலையத்தில் பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டிருக்கவில்லை,.

இராஜதந்திரிக்கு அவரது தூதரகத்தின் மேற்பார்வையில் தனிமைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டும் எனவும்,அவர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுவார் எனவும் தெரிவித்திருந்தோம்

ஆனால் அவர் எங்கு சோதனைக்கு உட்படுவார் என தெரிவிக்கவில்லை என ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஜூன் முதலாம் திகதி சோதனைகள் விமானநிலையத்தில் கட்டாயமாக்கப்பட்டன எனவும் அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

இராஜதந்திரிக்கு இது தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக விமானநிலைய அதிகாரிகள் குழப்பநிலையை எதிர்கொண்டனர், அதன் காரணமாக அவர் செல்வதற்கு அனுமதித்தோம்,இதன் மூலம் நாங்கள் பாடங்களை கற்றுக்கொண்டு புதிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.


you may like this
இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

முக்கிய தேவாலயங்களிற்கு வெடி குண்டு மிரட்டல்? கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது!

முக்கிய தேவாலயங்களிற்கு வெடி குண்டு மிரட்டல்? கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது!