மகிந்த ராஜபக்சவின் காலமே பொற்காலம்: 5 சதத்திற்கும் நம்ப முடியாத மனிதரே மைத்திரி

63shares

மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்கள் அல்ல.

இவர்கள் பொதுஜன பெரமுனவின் நிறந்தில் ஆடை அணிந்து கொண்டு, மகிந்த மற்றும் கோட்டாபயவின் படங்களை கொண்டு வருவதால் ஏமாற வேண்டாம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொலியத்தை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் காலமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொற்காலம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது கரைந்து போய்விட்டது. அதனை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதிக்கு வேலை செய்யக் கூடிய பின்னணியை உருவாக்க வேண்டும்.

அமைச்சு பதவிகளை தருவதாக கூட்டணி உடன்படிக்கையில் நிபந்தனைகள் இல்லை.

அடுத்த அரசாங்கத்தில் தமக்கே அமைச்சு பதவி என சிலர் கூற முயற்சித்து வருகின்றனர்.

மைத்திரியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். நான் இதனை பொலன்நறுவைக்கு சென்றாலும் கூறுவேன்.

நாங்கள் நான்கரை ஆண்டுகள் துன்பப்பட்டோம். மீண்டும் துன்பப்பட முடியாது.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவும் அவரது குடும்பத்தினரும் சஜித் பிரேமதாசவுக்கே வேலை செய்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அணியை தெரிவு செய்ய வேண்டும் என்பதே எமது தேவை.

மைத்தரிபால சிறிசேன என்பவர் 5 சதத்திற்கும் நம்ப முடியாத மனிதர். அவருக்கு அவரது அணியை தெரிவு செய்துக்கொள்ள இடமளிக்க முடியாது.

கூட்டணி அமைத்திருந்தாலும் இத்தனை அமைச்சு பதவிகள் வழங்கப்படும் எனக் கூறப்படவில்லை எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்