மஹிந்தவின் முகத்தைக்காட்டி வாக்குகளைப் பெற கோட்டாபய முயற்சி

28shares

வாக்குகள் சிதறும் என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சர்வாதிகார தோற்றத்தை மக்கள் வெறுக்க ஆரம்பித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச பிரதமராக கடமையாற்ற ஆரம்பித்துள்ளதன் காரணமாக இந்த நிலைமை சமநிலைக்கு வந்துள்ளது.

மகிந்த ராஜபக்ச இனவாத தலைவர் இல்லை என்பதால், தமிழ் மற்றும் முஸ்லிம் விரோத போக்கில் செல்ல மாட்டார் என எண்ணம் இருக்கின்றது.

இதனால், அவரது முகத்தை காட்டி வாக்குகளை அதிகரித்துக்கொள்ளலாம் என எண்ணுகின்றனர்.

கோட்டாபய ராஜபக்சவின் ஹிட்லர் முகத்தை போட்டு, இராணுவத்தையும் சர்வாதிகாரத்தையும் முன்னெடுத்துச் செல்வது தோல்வியை தரும் என்பதை அவர்களே உணர்ந்துள்ளனர் எனவும் விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சம்பந்தன் மற்றும் சுமந்திரன் விசாரணைக்கு அழைப்பு

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் விசாரணைக்கு அழைப்பு

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்