கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்கிய போஷாக்கு உணவு பொதியை பறித்துள்ள அரசாங்கம்!

22shares

கடந்த நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசாங்கம் மக்களுக்கு என்ன செய்தது என கேள்வி எழுப்பிய மக்களுக்கு தற்போது உண்மை புரிய ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் களனி தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனநாயகம், சட்டத்தின் ஆளுமையை ஸ்தாபித்து நீண்டகால நோக்குடன் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்த விதத்தை தற்போது மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

தேசிய அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு பெரியளவில் நிவாரணங்களை வழங்க முடியாமல் போனமை தொடர்பாக வருத்தப்படுகிறேன். எனினும் நாட்டுக்காக பாரிய பங்களிப்பை செய்ய முடிந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் நேரடியான தலையீடு மற்றும் எண்ணக்கருவிற்கு அமைய 1990 அம்பியூலன்ஸ் சேவை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக இந்திய பிரதமரின் ராஜதந்திர பங்களிப்புக்கு நன்றி கூற வேண்டும். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மக்களின் வாழ்க்கை செலவு குறைக்கப்பட்டது.

சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலைகள் குறைந்துள்ள போதிலும் அதற்கான நிவாரணம் மக்களுக்கு கிடைக்கவில்லை.

கர்ப்பிணி தாய்மாருக்கு வழங்கப்பட்ட 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போஷாக்கு பொதியை அரசாங்கம் மக்களிடம் இருந்து பறித்துள்ளது. எமது அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வழங்கிய சம்பள அதிகரிப்பு இரத்துச் செய்யப்பட்டமை கவலைக்குரியது.

கடந்த அரசாங்கம் பொலிஸார் மற்றும் முப்படையினருக்காக சம்பளத்தை அதிகரித்தது. தற்போது சம்பளம் அதிகரிக்கப்படுவதில்லை என்பதுடன் வழங்கும் சம்பளத்தையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின் கட்டணங்களை பார்க்கும் போது மக்களுக்கு அரசாங்கத்தின் உண்மையான சுயரூபம் தெரிய ஆரம்பித்துள்ளது எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்