பிரதமர் வெற்றிடத்திற்கு மைத்திரி: வெளியான பகீர் தகவல்!

65shares

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் பதவியை வழங்குவதாக அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் எதுவும் உருவாகி இருக்காதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

மைத்திரி நீங்கள் அவசரப்பட வேண்டாம் நான் உங்களை பிரதமராக நியமிப்பேன் என மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தெரிவித்திருந்தால் எந்த பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது.

ஆனால் இறுதியில் என்ன நடந்தது? நாட்டை காப்பற்றிய தலைவர் தோல்வியடைந்தார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இரண்டாக பிளவுப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதியுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என தற்போது கூறுகின்றனர்.

மைத்திரிபால சிறிசேனவே மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். அப்படி பார்த்தால் மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவை சார்ந்து இருந்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சம்பந்தன் மற்றும் சுமந்திரன் விசாரணைக்கு அழைப்பு

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் விசாரணைக்கு அழைப்பு

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!