ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு இல்லை: கீழ்த்தரமான செயலை கடுமையாக விமர்சித்த மகிந்தானந்த அளுத்கமகே!

27shares

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை நிறுத்த பொலிஸார் எடுத்த நடவடிக்கை மிகவும் தவறானது எனவும் இது குறித்து மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

விசாரணைகளின் போதும், தகவல் வெளியிடும் போது கிரிக்கெட் வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்பதை நான் தெளிவாக கூறியிருந்தேன். இந்த நிலையில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் இலங்கை அணியின் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை எந்த அடிப்படையில் விசாரணைக்கு அழைத்தனர் என்பது தெரியவில்லை.

இந்த சட்டத்தின் மூலம் விசாரணைகளை நடத்த முடியாது என விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி என்னிடம் கூறினார். விளையாட்டுப் போட்டிகள் காட்டிக் கொடுக்கப்படுவது தொடர்பான சட்டம் 2019 ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்டது.

இந்த விசாரணைக்கு வாக்குமூலம் வழங்க தாம் கடமைப்பட்டிருக்கவில்லை என குமார் சங்கக்காரவின் சட்டத்தரணி கூறியுள்ளார். இந்த சட்டம் தவறானது என்பதே இதற்கு காரணம். ஆரம்பிக்கப்பட்ட விசாரணை தவறானது என்பதை பொலிஸாரும் உணர்ந்துக்கொண்டனர்.

தவறான விசாரணைகளை ஆரம்பித்தால் பொலிஸாருக்கு அதனை நிறுத்த முடியாமல் போகும். தெரிவுக்குழுவின் உறுப்பினர்களிடம் மாத்திரமே பொலிஸார் தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அப்போது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் மற்றும் தலைவரிடம் வாக்குமூலம் பெற்றார்களா? நிறைவேற்று அதிகாரிகளிடம் பெற்றார்களா? போட்டியுடன் சம்பந்தப்பட்ட எவரிடமும் வாக்குமூலம் பெறவில்லை. யாரிடம் தகவல்களை பெற வேண்டும் என்பதை நான் தெளிவாக கூறியுள்ளேன்.

ஒருவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு விசாரணை கோப்புகளை மூட முடியுமா?. இதே விதமாகவே பொலிஸார் கடந்த காலத்திலும் செய்தனர். இவ்வாறு கோப்புகளை மூடுவது சரியாக இருக்காது. இது தொடர்பாக நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மிகவும் கீழ்த்தரமான வேலையை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் செய்துள்ளார்.

இது தொடர்பாக முழுமையான விசாரணைகளை நடத்துமாறு நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தவறை என் மீது சுமத்தி விட்டு, சம்பவத்தை மூடி மறைக்க பொலிஸார் முயற்சித்து வருகின்றனர். எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சம்பந்தன் மற்றும் சுமந்திரன் விசாரணைக்கு அழைப்பு

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் விசாரணைக்கு அழைப்பு

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்