பாங்கொங்கில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட கருணா! வெளிவரும் உண்மைத் தகவல்

606shares

நாங்கள் தான் விநாயகமூர்த்தி முரளிதரனை தாய்லாந்திற்கு அனுப்பி புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கருணா வெளியிட்டுள்ள சர்ச்சையான கருத்து தொடர்பாக எந்ததொரு நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கப்படாமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ரஞ்சித் மத்துமபண்டார மேலும் கூறியுள்ளதாவது,

கருணாவை நாங்கள் பாங்கொங்கிற்கு அனுப்பி சீர்த்திருத்தினோம். அதன் பின்னரே அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகினார்.

நாங்கள் கருணாவுக்கு வேறு எதனையும் செய்யவில்லை. ஆனால் தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ளவர்கள் தான் அவரை அரசியல்வாதியாக மாற்றியுள்ளனர்.

எனினும் கருணா தனது அறிக்கை தொடர்பாக உண்மையான விளக்கத்தை வழங்க வேண்டும். மேலும் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Like This vIdeo

இதையும் தவறாமல் படிங்க
எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் விசாரணைக்கு அழைப்பு

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் விசாரணைக்கு அழைப்பு

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!