தமிழில் வந்த அழைப்பாணை: வாங்க மறுத்த சுமணரத்ன தேரர்

186shares

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக தமிழில் நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் நீதிமன்றம் செல்லப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் காணொளி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் தொல்லியல் திணைக்கள அதிகாரி தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இந்த அழைப்பாணையினை நீதிமன்றம் அனுப்பியுள்ளது.

குறித்த அழைப்பாணை கடிதம் மூனறு தாள்களில் கிடைத்துள்ளது, அதில் தமிழ் மொழியில் உள்ளதால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதனால் என்னால் நீதிமன்றம் செல்லமுடியாது என கூறி குறித்த அழைப்பாணை கடிதத்தினை பொலிஸாரிடமே கொடுத்துள்ளார்.

சிங்கள மொழியில் குறித்த அழைப்பாணை அனுப்பப்பட்டால் மட்டுமே என்னால் நீதிமன்றம் செல்ல முடியும் எனவும் அந்த காணொளி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் கிழக்கில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்க முயற்சித்ததுயும் அவர்களை ஒரு கொட்டிலுக்குள் தடுத்து வைத்திருந்ததும் காணொளி வெளி வந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

You May See This Video

இதையும் தவறாமல் படிங்க
பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

மாகந்துர மதுஷ் படுகொலை விவகாரம்-மிருகங்களைப் போன்று கொலை செய்யும் அளவுக்கு இந்த நாடு வந்துள்ளது!

மாகந்துர மதுஷ் படுகொலை விவகாரம்-மிருகங்களைப் போன்று கொலை செய்யும் அளவுக்கு இந்த நாடு வந்துள்ளது!