கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

581shares

தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வலியுறுத்தி தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பித்துள்ளது.

இந்தப் போராட்டமானது சாவகச்சேரி சிவன் கோவிலில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சி பாணியில் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை ஒடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்கு மத்தியில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்த உணவு ஒறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி க. சுகாஷ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்