பால்மா இறக்குமதிக்கு வருகிறது தடை

197shares

உள்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் வெளிநாட்டில் இருந்து பால்மா இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்தவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பால்மா இறக்குமதி தடை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

எமது நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பசுக்களில் பால் கறக்கின்றனர். நம் நாட்டின் பால் உற்பத்தியில் நூற்றுக்கு 35% மட்டுமே பால்மாவை உற்பத்தி செய்கிறோம். ஏனைய அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பால் மாவை இறக்குமதி செய்கிறோம். வெளி நாட்டிலிருந்து உட்கொள்ளும் தேசமாக மாறியுள்ளது.

நாங்கள் மில்கோவுடன் இணைந்து, கால்நடைகளுக்குத் தேவையான உதவிகள், உணவுகள், புல் மற்றும் கால் நடைக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க பணி யாற்றுவோம். 3 ஆண்டுகளுக்குள் பாலில் தன்னிறைவு பெற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

இந்நாட்டிற்குப் பால் இறக்குமதி செய்வதை முற்றாக நிறுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். நியூஸிலாந்தில் இருந்து அதிக பால் மா இறக்குமதி செய்யும் நாடு இலங்கை தான் என அவர் தெரிவித்தார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்