13 ஆவது திருத்தம் தொடர்பில்-மோடியின் கருத்துக்கு உறுதிமொழி அளிக்காத ஸ்ரீலங்கா

375shares

இலங்கைத் தமிழர்களுக்கு 13வது திருத்தத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வை வழங்கவேண்டுமென இந்திய பிரதமர் விடுத்த வேண்டுகோளுக்கு ஸ்ரீலங்கா உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை என கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் ஸ்ரீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற காணொளி மூலமான கலந்துரையாடலில் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம் நீதி கௌரவம் குறித்த தமிழர் அபிலாசைகளுக்கு தீர்வை காணுமாறு கேட்டுக்கொண்டுள்ள இந்திய பிரதமர் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் மக்களின் ஆணை மற்றும் அரசமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நல்லிணக்கதத்தை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து இன மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா முன்னெடுக்கும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இருநாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் அவர்களது நிலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

எனினும் கொழும்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 13வது திருத்தம் குறித்த விடயங்கள் குறிப்பிடப்படவில்லை.

மாறாக இந்திய அறிக்கை போன்று இரு நாடுகளின் தலைவர்களும் ஆராய்ந்த பரந்துபட்ட விடயங்கள் குறித்தே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடபகுதி கடலில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை குறித்து இந்திய பிரதமரிடம் எடுத்துரைப்பேன் என பிரதமர் வெள்ளிக்கிழமை வடபகுதி மீனவர்களிடம் தெரிவித்த போதிலும் இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இருநாட்டு மீனவர்கள் தொடர்புபட்ட விடயங்களுக்கு வழமையான இருதரப்புஅதிகாரிகளுடனான கலந்தாலோசனைகள் ஊடாக தீர்வு காண்பதற்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது என அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்